Thursday, February 22, 2007

கூகுள் கணக்குப் பொறி

கூகுள் தேடல் பெட்டியில் இருந்து கூட்டல், கழித்தல் போன்ற எளிய கணக்குகளை செய்யலாம்.

எடுத்துக்காட்டுக்கு, பின் வரும் இணைப்புகளை அழுத்திப் பாருங்கள்.

56*78

100 miles in kilometers

இது போன்ற சிறு கணக்குகள், அலகு மாற்றங்கள் ஆகியவற்றை கூகுள் தேடல் பெட்டியில் இருந்தே செய்யலாம். Windowsல் start->accessories->calculator போய் அதை எடுத்துச் செய்வதற்குள் கூகுளில் கணக்கைப் போட்டு முடித்து விடலாம். தவிர, Windows கணக்குப் பொறியில் இல்லாத பல கணக்குகளையும் கூகுளில் செய்யலாம்.

முழுமையான கூகுள் கணக்குப் பொறி உதவிக்கு இங்கு பார்க்கவும்.

கூகுளில் சொற்களை தேடுவதை தவிர்த்து நிறைய குறுக்கு வழித் தேடல்கள் செய்ய முடியும். முழுமையான தேடல் உதவிக்கு இங்கு பார்க்கவும்.

அன்புடன்,
ரவிசங்கர்.

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவிசங்கர்!
இது பற்றி ஈழத்தில் இருந்து; "ஊரோடி-பகீ"...எனும் தம்பி ஓர் பதிவு சில மாதங்களுக்கு முன் போட்டிருந்தார்.
அவரும் உங்களைப் போல் கணனி ஆர்வலர்; பழம் தமிழ் ஆர்வலர்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

யோஹன், பகீ இது குறித்து எழுதியது அறிந்திருக்கவில்லை. அவரது பதிவை கொஞ்ச நாளாகத் தான் அறிந்து தொடர்ந்து படித்து வருகிறேன். இருந்தாலும், சில அருமையான சின்ன விசயங்களை பலர் அறிந்து கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள். அதனால், யாராவது சிலருக்கு பயன்பட்டாலும் சரி என்று எழுதுவது தான் இது போன்ற சிறு குறிப்புகள்