Tuesday, December 11, 2007

இன்று முதல் தமிழில் wordpress தளம் !!!

இன்று முதல் wordpress தமிழ் இடைமுகப்புடன் வெளி வருகிறது !!!

பார்க்க - http://ta.wordpress.com

உங்கள் வேர்ட்ப்ரெஸ் தன்விவரப் பக்கத்தில் பக்கத்தில் interface languageஆக ta - தமிழ் தெரிவு செய்யப்பட்டிருந்தால் உங்கள் பதிவின் கட்டுப்பாட்டகமும் தமிழில் தெரியும்.

இந்திய மொழிகளில் தமிழே முதலாவதாக இத்தகைய இடைமுகப்புடன் வெளிவருகிறது !!

தமிழாக்கப் பங்களிப்புக்கு அழைப்பு விடுத்து ஐந்தே நாட்களில் அசுரத்தனமாக மொழிபெயர்த்து திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள் தமிழ் வலைப்பதிவு நண்பர்கள். 20க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தமிழாக்கப்பணியில் பங்களித்திருக்கிறார்கள். குழுமத்தில் பதிந்து பங்களித்தவர்கள் விவரத்தை இங்கு பார்க்கலாம்.

என்னுடைய மகிழ்ச்சியைச் சொல்வதற்கு வார்த்தைகள் ஏதும் இல்லை.

பிழை திருத்த, சரி பார்க்க வாய்ப்பு இன்றி நேரடியாக இந்த மொழிபெயர்ப்பு பொதுப்பார்வைக்கு வந்திருக்கிறது என்பதால் நிச்சயம் இதில் சில குறைபாடுகள் இருக்கும். நமது முதல் முயற்சி என்பதால் இதைப் பொறுத்துக் கொள்வீர்கள் தானே?

நீங்கள் கண்டறியும் குறைகள், விரும்பும் மேம்பாடுகள் குறித்து வேர்ட்ப்ரெஸ் தமிழாக்கக் குழுமத்தில் தெரிவித்தால் உதவியாக இருக்கும். இந்தத் தமிழாக்கப் பணி ஒரு தொடர் பணி என்பதால் வரும் நாட்களில் தொடர்ந்து செப்பனிடப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

அன்புடன்
ரவி

29 comments:

சிறில் அலெக்ஸ் said...

ரவி,
வாழ்த்துக்கள். உங்கள் இணையத் தமிழ் முனைப்பில் இன்னொரு சாதனை. மகிழ்ச்சி.

கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் பாரரட்டுக்களும்.

சிறில் அலெக்ஸ் said...

எப்படி தமிழ் வோர்ட்ப்ரெஸ் தளத்தை அடைவது?

சிறில் அலெக்ஸ் said...

சற்றுமுன்னில் ஒரு செய்தி போட்டிருக்கலாமே :)

Boston Bala said...

அதிரடி!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நன்றி சிறில். தமிழாக்கத்துக்குப் பங்களித்தவர்களில் நானும் ஒருவன். அவ்வளவு தான் :)

http://ta.wordpress.com செல்லுங்கள். உங்கள் wordpress பதிவுகளும் தானாகத் தமிழில் தெரியும்.

சற்றுமுன்ல நீங்களே போட்டுறுங்களேன் :)

இரா.சுகுமாரன் said...

//நீங்கள் கண்டறியும் குறைகள், விரும்பும் மேம்பாடுகள் குறித்து வேர்ட்ப்ரெஸ் தமிழாக்கக் குழுமத்தில் தெரிவித்தால் உதவியாக இருக்கும//

குறை சொல்வதல்ல முதலில் மகிழ்ச்சி, முதலில் பாராட்டு அதன் பின் தான் குறைகள்.

பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கு எனது நன்றிகள் பாராட்டுக்கள்.

வினையூக்கி said...

பெருமைக்குரிய சாதனை. இந்த முனைப்பில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்

வினையூக்கி said...

//தமிழாக்கத்துக்குப் பங்களித்தவர்களில் நானும் ஒருவன். அவ்வளவு தான் :)//
ரவிசங்கர் , உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள். :) :)

அறிஞர். அ said...

வாழ்த்துக்கள் ரவி....

உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றும் தொடர்ந்து வெற்றியடையட்டும்....

மலைநாடான் said...

ரவி!
முயற்சியில் பங்குகொண்ட அனைவர்க்கும் பாராட்டுக்கள்.

தமிழ்பித்தன் said...

தமிழ் வலைப்பதிவாளன் என்ற முறையில் நன்றிகள் அதன் பின் வாழ்த்துகள்

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள் ரவி.

உங்க பின்னூட்டத்தின்படி தேசியில் போட்டுடலாம். பிரச்சனை இல்லை.

என்னுடைய வேர்டுப்ரெஸ் பயனர் கணக்கு மூலம், நீங்கள் கொடுத்த ச்சுட்டியில் நுழைய முடியலை(-:

புதுசா இன்னொருமுறை புதுக்கணக்கு வச்சுக்கணுமா?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நன்றி, துளசி. எல்லா கணக்கும் செல்லும்னு தான் நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரம் / நாள் கழித்து முயலுங்கள் :( அல்லது வேறு கணக்கைப் பயன்படுத்தப் பார்க்கலாம்.

பி.கு - அது என்ன ச்சுட்டி :) ? சுட்டின்னு எழுதினாலே chuttiன்னு வாசிப்பது தானே சரியான ஒலிப்பு

துளசி கோபால் said...

இந்தப் பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

ரவி,

சுட்டியைச் சுட்டிக் காமிச்சு அழுத்தமாச் சொல்றதுக்காகத்தான் 'ச்சுட்டி':-)))

தகடூர் கோபி(Gopi) said...

வாழ்த்துக்கள் ரவி,

நிறைய பகுதிகள் இன்னும் தமிழாக்கம் செய்யப்படவில்லை என நினைக்கிறேன் (உ.ம்: "மேலும்" சுட்டிகளை சொடுக்கினால் வரும் பக்கங்களின் உள்ளடக்கத்தில் சில பகுதிகள் தமிழாகவும் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் இருக்கின்றன)

Kasi Arumugam said...

இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

நந்தா said...

வாழ்த்துக்கள் ரவி.

மணியன் said...

் இந்த நாள் இனியநாள். பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் !! வினையூக்கியாக செயல்பட்ட உங்கள் உற்சாகத்திற்கு நன்றிகள்.

Jay said...

தமிழர்களுக்கு ஒரு வெற்றித் திருநாள்.. சளைக்காமல் தமிழாக்கிய ஆர்வலர்களுக்கு நன்றி. ரவிக்கு விஷேட நன்றி :)
(அப்பப்ப எனக்கு வரும் சந்தேகங்களை எல்லாம் தீர்த்து மொழிபெயர்க்க உதவியமைக்காக)

Yogi said...

தமிழாக்கத்தில் பங்கு கொண்டவன் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியும், பிற பங்களிப்பாளர்களுக்கு நன்றிகளும், பயனர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராம்/Raam said...

//20க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தமிழாக்கப்பணியில் பங்களித்திருக்கிறார்கள். குழுமத்தில் பதிந்து பங்களித்தவர்கள் விவரத்தை இங்கு பார்க்கலாம். //

ஹய்யா.. இதிலே நானும் ஒரு ஆளு... :)

✪சிந்தாநதி said...

நன்றி ரவி...

இதில் பங்களிக்க வாய்ப்பை உருவாக்கித் தந்தமைக்கும் இத்தனை விரைவாக செயல் முடிக்க அனைவருக்கும் ஊக்கமாக இருந்தமைக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.

கானா பிரபா said...

பங்கு போட்டுக் கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி ;-)

பகீ said...

வாழ்த்துக்கள் ரவி. என்னால் பங்களிக்க இயலவில்லை என்பது வருத்தம்தான்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

boston bala, வினையயூக்கி, தமிழ்பித்தன், மயூரேசன், கானா பிரபா, மலைநாடான், பகீ, நந்தா, சிந்தாநதி, ராம், பொன்வண்டி, காசி ஆறுமுகம், மணியன், சுகுமாரன்

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி வேர்ட்ப்ரெஸ் தமிழாக்கம் ஒரு தொடர் பணி தான். எனவே, நீங்களும் தொடர்ந்து பங்களிக்கலாம். பங்களிக்க வேண்டுகிறேன்.

கலை said...

//20க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தமிழாக்கப்பணியில் பங்களித்திருக்கிறார்கள். குழுமத்தில் பதிந்து பங்களித்தவர்கள் விவரத்தை இங்கு பார்க்கலாம். //

ஹய்யா.. இதிலே நானும் ஒரு ஆளு... :) :) :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கலை - உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி சொல்லணும். தமிழாக்கம் குறித்த என் twitterஐப் பார்த்து நீங்கள் தான் முதலில் உதவ முன் வந்தீர்கள். அதற்குப் பிறகு மயூரேசனும் தமிழாக்கப் பணிக்கு மீள வந்தார்..நீங்கள் இருவரும் இணைந்த உற்சாகத்திலேயே இன்னும் பலரையும் அழைத்தேன்.

மு. மயூரன் said...

தமிழ்க்கணிமைக்கு இனிய வாழ்த்துக்கள்.

இந்த உழைப்பில் பல்வேறு வகையிலும் பங்கெடுத்தcஅர்களுக்கு மனங்கனிந்த நன்றிகள்.

தமிழ் இடைமுகப்புடன் வலைப்பதிவு சேவை ஒன்றை இப்போது பெற்றுள்ளோம். தமிழர்களுக்காக, தமிழர்களால் நடத்தப்படும் வலைப்பதிவு சேவை ஒன்றை விரைவில் பெறுவதற்கு இந்த நாளில் உறுதி பூணுவோம்.


அதுதான் உண்மையான இலக்கு. வாடகை வீட்டுக்கு வண்ணம் பூசுவதல்ல.


இந்த உழைப்பின் பக்க உற்பத்திகள் தமிழுக்கு நிறைய செல்வங்களை கொண்டுவந்து சேர்த்திருக்கும். எனவே இந்த உழைப்பு பெறுமதி மிக்கது.

Sam said...

பங்களித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!

நான் பங்களிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் :(
விரைவில் பிளாக்கரில் இருந்து வேர்ட்ப்ரஸ்சுக்கு மாற வேண்டும்!!!